தொடரை வென்றது தென்னாபிரிக்கா

390

சுற்றுலா பங்களாதேஸ் அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி மூன்று நாட்களில் நிறைவுக்கு வந்தது.

இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி இனிங்சினாலும் 254 ஓட்டங்களாலும் வெற்றிப்பெற்றது.

போட்டியில் தமது முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 4 விக்கட்டுக்களை இழந்து 573 ஓட்டங்களை பெற்றவேளை ஆட்டத்தை இனிங்சை இடைநிறுத்தியது.

இதனை அடுத்து தமது முதலாவது இனிங்சை ஆரம்பித்த பங்களாதேஸ் அணி, 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன் மூலம் பொலோ – ஒன் பெற்ற பங்களாதேஸ் அணி மீண்டும் இரண்டாம் இனிங்சை தொர்ந்தது.

அதிலும் 172 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி இரண்டுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் கைப்பற்றியது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE