பூஜையுடன் ஆரம்பமானது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

568

கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.
கவுதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஓவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்திற்கு தருண் பாலாஜி ஒளிப்பதிவை மேற்கொள்ள, இசையமைப்பாளர் பாலமுரளி பாலா இசையமைக்கிறார்.
பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பை கவனிக்க, சுப்ரமணிய சுரேஷ் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்த நிலையில் படத்திற்கு அண்மையில் பூஜைக்கு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் வெளியாகி வசூலை குவித்து வரும் ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE