சிறுவர் இல்ல சிறாா்களை தாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல், நிர்வாகத்தையும் எச்சரித்த நீதிமன்றம்

43

 

 

கிளிநொச்சி மகா தேவா சைவ சிறாா் இல்லச் சிறாா்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிறுவா் இல்லத்தில் உள்ள இளைஞனுக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிட்டுள்ளதோடு, நீதிமன்றம் சிறுவா் இல்ல நிர்வாகிகளையும் கடுமையாக எச்சரித்துள்ளது.

கிளிநொச்சி மகா தேவா சைவ சிறாா் இல்ல சிறுவா்கள் சித்திரவதைக்குள்ளானதாக கடந்த வாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் சிறுவன் ஒருவனின் தந்தையால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கிளிநொச்சி சிறுவா் நன்நடத்தை அதிகாரிகள் குறித்த சிறுவா் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளாக்கபட்டனா் என்ற சந்தேகத்தில் ஜந்து சிறுவா்களை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு அனுமதித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று திங்கள் கிழமை இந்த வழக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளபட்ட நிலையில் சிறுவா் இல்லத்தில் இருக்கின்ற இளைஞனை விளக்க மறியில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், இல்லத்தின் நிர்வாகிகளையும் கடுமையாக எச்சரித்துள்ளது. அத்தோடு மாவட்ட சிறுவா் நன்நடத்தை அதிகாரிகளை சென்று சிறுவா்களின் நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE