சொந்த நிலத்தை தானமாக வழங்கிவிட்டு.. சாலையில் வசிக்கும் நபர்

559

ஏழ்மையான நிலையிலும் தன்னுடைய நிலத்தை பள்ளிக்கூடம் கட்டிக்கொள்ள தானமாக வழங்கிய நபரின் செயல் பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜ்கிஷோர் சுவாமி (50) என்ற மனிதர் தான் இதை செய்துள்ளார்.

ஏழ்மையான மற்றும் படிப்பறிவு இல்லாத ராஜ்கிஷோருக்கு கால் ஊன பிரச்சனை உள்ளது. இவ்வளவு சிரமத்திலும் தான் வாழ்ந்து வரும் வீட்டு நிலத்தின் ஒரு பகுதியை பள்ளிக்கூடம் அமைக்க கொடுத்துள்ளார்.

அங்கு தற்போது பள்ளிக்கூடம் கட்டப்பட்டு 400 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

பலநாட்கள் ராஜ்கிஷோர் இடப் பற்றாக்குறை உள்ளதால் நடைபாதையில் தங்கி கொள்கிறார்.

இவரின் இரண்டு மகன்களும் மாற்றுதிறனாளிகள் ஆவார்கள்.

இதன் காரணமாக தனது ஊனமான நிலையிலும் வீடுவீடாக சென்று பொட்டு, குங்குமம் போன்ற பொருட்களை விற்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து ராஜ்கிஷோர் குடும்ப செலவை கவனித்து வருகிறார்.

அவரது இரண்டு மருமகள்களும் இதற்கு உதவி வருகிறார்கள்.

ராஜ்கிஷோர் வாழும் பகுதியில் பள்ளிக்கூடம் கட்ட அங்கு வாழும் மக்களின் நிலங்களை கேட்ட போது யாரும் தரமுன்வரவில்லை.

ஆனால், ராஜ்கிஷோர் தனது நிலத்தை கொடுத்ததுடன், கிராமத்தில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு செல்வதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என மகிழ்ச்சி அடைந்தாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE