மண்வாசனை இறுவெட்டு வெளியீடு (படங்கள் இணைப்பு)

911

மண்வாசனை இறுவெட்டு வெளியீடு மல்லாவியில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு துணுக்காய் தமிழ்த்தாய் கலா மன்றத்தின் உருவாக்கத்தில் மண்வாசனை இறுவெட்டு மல்லாவி சிவன் ஆலயத்தில் நேற்று பி.ப 02.30 மணியளவில் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வெளியீட்டு வைக்க கிருபா லேணஸ் உரிமையாளர் அ.கிருபாகரன் பெற்றுக்கொண்டார்.

முல்லை மாவட்டத்தின் மண்ணின் மதுமையை வெளிப்படுத்தும் முகமாக இறுவெட்டு உருவாக்கப்பட்டு வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது. கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டு நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டது.

இதற்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா வடமாகாண சபை சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் ஆகியோரும் துணுக்காய் பிரதேச செயலாளர் இ.பிரதாபன் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ரஞ்சனா நவரட்ணம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

– முல்லைத்தீவு நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE