இந்திய கிரிக்கெட் அணி தோல்வி

458

சுற்றுலா அவுஸ்ரேலியா அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்ரேலிய அணி 8 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

அஸாம் மாநிலம் கவுகாத்தி பார்சபரா விளையாட்டு திடலில், முதலாவது சர்வதேச போட்டியாக இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை இந்திய அணிக்கு வழங்கியது.

அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 118 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக 27 ஓட்டங்களை கேதர் ஜாதவ் பெற்றார்.
பந்துவீச்சில் ஜேசன் பெஹ்ரண்டோர்ப்  21 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலளித்த அவுஸ்ரேலிய அணி 15.3 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் மோயஸ் ஹென்றிக்குஸ்  62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் இரு அணிகளும் ஒவ்வொரு போட்டியில் வெற்றிப்பெற்று சமநிலையில் உள்ளன.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE