இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இந்தியா நடைமுறைப்படுத்தவேண்டும் -ஈரோஸ் இரா. பிரபாகரன்

438

 

இந்த ஈழ போராட்டத்தை இந்தியா தான் ஆரம்பித்து வைத்து அதனை முடிவுக்கு கொண்டு வந்ததும் இந்தியாதான். இலங்கை இந்திய ஒப்ந்தத்தில் கையொப்பமிட்டது இவர்கள் தான் எனவே தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத்தர வேண்டிய தார்மீககடமை இந்தியாவுக்கு உண்டு என ஈரோஸ் செயலாளர் நாயகம் இரா. பிரபாகரன்தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வொய்ஸ் ஒப் மீடியா ஊடக கற்கை நிலையத்தில்ஈழவர் ஜனநாயக முன்னனி(ஈரோஸ்) மாற்றத்தை நோக்கி எனும் தலைப்பிலாளர் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர் மகாநாடு இடம்பெற்றது இதில் இரா. பிரபாகரன்கருத்து தெரிவிக்கையிலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் அன்றில் இருந்து இன்றுவரைக்கும் தொடர்ந்தும்ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனவே ஈரோஸ் வடகிழக்கு மலையக தமிழ்மக்களுக்கு ஒரு மாற்றத்தை கொண்டுவருவதற்கு பயணத்தைமேற்கொண்டுவருகின்றோம்.மகிந்தராஜபஷவின் ஆட்சி சரியில்லை என ரணில் நல்லாட்சியை ஏற்படுத்தியவர்கள் வடகிழக்கு மலையக தமிழ் பேசும் மக்கள் உலகமறிந்த உண்மை
ஆனால் இந்த நல்லாட்சி கூடதமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது எனவே தமிழ் மக்கள்
ஏமாந்தது தான் வரலாறுகள்.

உதாரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் யுத்தகாலத்தில் இருந்து எந்த விதவேதனமும் இன்றி ஆயிரத்து 84 தொண்டர் ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர்இவர்கள் அரசியல் சக்திகளால் ஏமாற்றப்பட்டன் இது தொடர்பாக 676 பேருக்கான நியமனங்களை ஏற்படுத்தியுள்ளேன் இது உதாரணத்திற்கு ஒன்று இவ்வாறுதொடர்ந்து தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்

அதுமட்டுமல்ல வட மாகாணமானாலும் சரி கிழக்கு மாகாணம் ஆனாலும் சரி இந்த மாகாணங்களை ஆளவேண்டியவன் தமிழ் மகன் தமிழர்களுடைய தியாகத்தின்அடிப்படையில் தான் மாகாண சபை என்ற சொற்ப தீர்வு கிடைத்தது ஆனால் என்னநடந்தது என்ன நடக்கின்றது கிழக்கு மாகாணத்தை முஸ்லீம் காங்கிரஸக்கு தாரைவாத்துக் கொடுத்துவிட்டனர் இதனால் தமிழ் மக்களின் பாரம் பெரிய நிலங்கள்பறிபோய்க் கொண்டிருக்கின்றது.

திட்டமிட்ட குடியேற்றம் சொத்துக்கள் எல்லாம் சூறையாடப்பட்டுகொண்டிருக்கின்றது இதனையெல்லாம் தட்டிக்கேட்க வக்கில்லாத தமிழ் தலைவர்கள்இதற்கான முடிவை கண்டதுமில்லை ,40 வருட காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்புநடாத்திக் கொண்டிருக்கின்றதே தவிர இந்த மக்களுக்கான தீர்வை கண்டதுமில்லைமக்களை நோக்கி திரும்பி பார்த்த சரித்திரம் இல்லை

இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏதாவது சாதித்துள்ளதா அல்லது எதனை பெற்றுக்கொடுத்துள்ளனர் என்றால் ஒன்றுமே இல்லை யுத்தம் இலச்சக்கணக்காண மக்களைபுலம்பெயர் நாட்டுக்கு புலம்பெயரவைத்தது ஆயிக்கணக்கான விதவைகள்,ஆயிக்கணக்கான மனநேயாளிகள், ஆயிக்கணக்காண ஊணமுற்றேரை, அனாதை குழந்தைகளைஉருவாக்கி வைத்திருக்கின்றோம்

அத்தோடு கல்வி கலாச்சாரம் பாரம் பெரியம் தொழில்வாய்ப்பு போன்றவற்றில் 40வருடகாம் பின்னேக்கிச் சென்றுள்ளோம் இது தான் வரலாறு இது தான் பேராட்டம்தந்த பரிசு இன்று எந்த அரசு வந்தாலும் மாறி மாறி தமிழ் மக்கள் ஏமாற்றுக்கொண்டிருக்கின்றனர் எந்த அரசாங்கத்தினாலும் தமிழ் மக்களுக்கு தீர்வுவைக்கமுடியாது

எனவே இந்த தார்மீக பங்கு இந்தியாவுக்கு மட்டும் உள்ளது ஆகவே ஏற்கனவே உள்ளஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை இந்தியா நடைமுறைப்படுத்தவேண்டும் அதுமட்டுமல்ல,கிழக்க மாகாணத்தில் மட்டுமல்ல வன்னி மாவட்டத்திலும் தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றது இவைகளை காப்பற்ற வேண்டியதேவையுள்ளது.

எனவே இவைகளை தட்டிக் கேட்க ஈரோஸ் இருக்கின்றது இனிமேல் தமிழ் மக்களைஏமாற்றமுடியாது. ஏமாற்றவும் விடமாட்டோம் ஓட்டுமாவடியில் அண்மித்த கிராமானபிள்ளையாரடி கிராமம் 1982 ம் ஆண்டு 280 மேற்பட் தமிழ் குடும்பங்கள்வெட்டி கொல்லப்பட்டு துரத்தியடிக்கப்பட்டனர்ஆனால் அந்த கிராமத்தில் ஒரு சைவ ஆலயமும் கிறித்தவ ஆலயமும் இருக்கின்றதுஅந்த மக்கள் எங்கு சென்றார்கள் என தெரியாது இது இந்தியாவில் அத்திப்பட்டிகிராமம் போல இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள இந்த கிராமம் இலங்கைவரைபடத்தில் இருந்து இல்லாமல் போயுள்ளது இதனை தேடவேண்டிய தார்மீக கடமைஎங்களுக்கு இருக்கின்றது

எனவே அந்த கிராம மக்கள் ஈரோசை தொடர்பு கொண்டால் அதில் மீளவும் குடியமர்த தயாராக இருக்கின்றது எனவே ஈரோஸ் வடகிழக்கு மலையக தமிழ் பேசுகின்ற மக்களுக்கு ஈழம் தான் போராடியது எனவே தமிழ் பேசுகின்ற இந்து, பறங்கியர்,கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் எவராயினும் தமிழ் பேசுகின்ற மக்களுக்கு ஒருஈழம் தேவை எனத்தான் போராடியது எனவே அரசியல் இலாபங்களுக்காக முஸ்லீம்தனித்து வாழவேண்டும் தனி அலகு வேண்டும் தனி ஒரு இனம் என்பது இது சவூதிஅரேபியாஅல்ல இது தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் நாங்கள் தமிழ்களாக
பார்க்கின்றோம்.

எனவே அதாவுல்லாவே, ரவூஹக்கிமே. ஹிஸ்புல்லாவே. அமீர்அலியே முஸ்லீம்முஸ்லீம் எனசொல்லி தமிழ் மக்களை ஓரங்கட்ட இனி விடமுடியாது தேர்தல் என்றுவந்தால் உங்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும் வாக்குகளை பெற்றுக்கொண்ட பின்னர் தனி ஒரு பிரதேசம் தனி நிர்வாகம் தனி அலகு என்று ஏன் இப்படிதமிழ் மக்களையும் முஸ்லீம் மக்களையும் உங்கள் அரசியல் இலாபத்திற்காக
கூறுபோடவேண்டாம் . தமிழ் முஸ்லீம் மக்கள் ஒன்றனைந்து வாழவேண்டும் இது
தான் ஈரோஸ் அமைப்பின் கொள்கை எனவே இதற்கு மாற்றம்வேண்டும்.

தமிழ் மக்கள் தேவைகள் சம்மந்தமாக எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் ஜயா,முஸ்லீம் காங்கிரசிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றாராம். ஆனால் தமிழன்யாரிடமும் கெஞ்சிய சரித்திரமும் இல்லை மண்டியிட்ட சரித்திரமும் இல்லைஎனவே 13 வது திருத்தச்சட்டம் அமுலுக்கு வரவேண்டும் என்றார்

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE