செயல்ப்பாடுகள் இன்றி காணப்படுகிறது வவுனியா வடக்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கம்

1068

வவுனியா வடக்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் செயல்ப்பாடுகள் இன்றி காணப்படுகிறது.
ஆரச சார்பற்ற நிறுவனமான சேவாலங்கா நிறுவனத்தினால் இப்பிரதேசத்தில் உற்பத்தியாளர்களின் பால்களை பதப்படுத்துவதற்காக 4 இலட்சம் ருபா பெறுமதியான யூஸ் பதனிடும் இயந்திரமும் சந்தைப்படுத்துவதற்கு வாகனமும் வழங்கப்பட்ட நிலையில் இச்சங்கத்தின் தலைவரும் நிர்வாக உறுப்பினர்களும் முயற்சி எடுக்கப்படாத காரணத்தால் 5 வருட காலமாக இயந்திரம் பாவனை இன்றி காணப்படுகின்றது.
அந்த வகையில் நிறுவனங்களால் அபிவிருத்திக்கு என வழங்கப்படும் சொத்துக்கள் தலைவரின் அசமந்த போக்கு காரணமாக துருப்பிடிக்கும் நிலைக்கு பெறுமதியான சொத்துக்கள் தள்ளப்படுகின்றது.
பண்ணை வளர்பிற்கென நிறுவனங்களினால் அமைத்து கொடுக்கப்பட்ட கட்டிடங்களும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
இதனை சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் கவனம் எடுக்கப்பட்டு இதன் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE