ரஜினி, கமல் பிரதமரை சந்திக்க வேண்டும் – இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்

479

சினிமாவுக்கு வரிவிலக்கு பெற ரஜினியும், கமலும் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சினிமா  கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.

தற்போது பல்வேறு பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

சினிமாவுக்கும் இந்த சலுகை வேண்டும் என்று ‘பிரேமம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் மரியாதைக்குரிய பிரபலங்களாக இருக்கும் ரஜினியும், கமலும் பிரதமர் மோடியை சந்தித்து, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு குறித்து அவருடன் பேச வேண்டும்.

நீங்கள் அவருடன் பேசினால் நிச்சயம் உங்கள் பேச்சுவார்த்தை திரை உலகத்தையும் ரசிகர்களையும் நிச்சயம் காப்பாற்றும் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE