ஹன்சிகாவால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

628

ஈரோடு வந்த நடிகை ஹன்சிகாவை பார்க்க ரசிகர்கள் திரண்டனர்.
இதனால் அங்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே நடந்த ஒரு விழாவில் பங்கேற்க நடிகை ஹன்சிகா வந்திருந்தார்.

அவரை காண காலை 7 மணியில் இருந்தே ரசிகர்கள் காத்திருந்தனர்.
விழா நடக்கும் பகுதியில் சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது.

அந்த மேடையில் ஹன்சிகா தோன்றி பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவரை காணும் ஆவலில் ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஹன்சிகா காரில் வந்து இறங்கியதும் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது.
கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE