ஆதரவற்ற நோயாளியை குப்பை தொட்டியில் வீசிய மருத்துவமனை

556

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ் தெரியாத நபர் ஒருவர், ஆதரவற்ற நிலையில் இரண்டு மாதமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவரின் நிலை மிகவும் மோசமாக இருந்ததாலும், படுத்த படுக்கையிலேயே இயற்கை உபாதைகள் சென்றதாலும் அவரை பராமரிக்க யாரும் முன்வரவில்லை.

இதனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பை மேட்டில்  அவரை ஊழியர்கள் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து, குப்பை தொட்டி அருகே வீசப்பட்ட நபரை, மருத்துவமனை ஊழியர்கள் மீண்டும் மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனையே நோயாளியை குப்பை மேட்டில் வீசி சென்ற சம்பவம் திருநெல்வேலி ஹைகிரவுண்ட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE