இரு இளைஞர்கள் மீது வாள் வெட்டு: யாழில் சம்பவம்

1372

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இரு இளைஞர்கள் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் குறித்த வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. மேற்படி வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE