கட்டலோனிய பிரிவினைவாதத் தலைவருக்கு காலக்கெடு

354

கட்டலோனிய பிரிவினைவாதத் தலைவருக்கு, ஸ்பெயின் அரசாங்கம் 5 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற கருத்துக் கணிப்பில் ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனிநாடாக அறிவிப்பதற்கு கட்டலோனிய தன்னாட்சி பிராந்தியத்துக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கினர்.

இதனை அடுத்து கட்டலோனியத் தலைவர் சுதந்திரத்தை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் சுதந்திர சாசனத்தில் அவர் கைச்சாத்திட்ட போதிலும், அது உடனடியாக நடைமுறைக்கு வராது என்று அறிவித்தார்.

இந்தநிலையில் கட்டலோனியாவில் சுதந்திரம் அறிவிக்கப்பட்டுள்ளதா? இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்கு அவருக்கு 5 நாட்கள் அவகாசம் வழங்குவதாக, ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE