சிக்கன் கட்லெட் செய்வது எப்படி?

976

தேவையானவை

உருளைக்கிழங்கு – 3
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் – 1 கப்
பெரிய வெங்காயம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 3/4 தேக்கரண்டி
ம‌ஞ்ச‌ள்தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா -‍ 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 3/4 தேக்கரண்டி
ப்ர‌ட் ஸ்லைச‌ஸ் – 4
முட்டை – 1
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
உப்பு – தேவைகேற்ப‌

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை கழுவிவிட்டு வேக வைத்து எடுக்கவும். சூடு ஆறியதும், தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.

பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

சிக்கனை நன்கு கழுவி அலசி எடுத்து, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, மஞ்சள்த் தூள், சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ள‌வும்.

ஆறியதும் மிக்ஸியில் போட்டு சில நொடிகள் பல்ஸ் மோடில் சுற்றி, உதிர்த்து வைக்கவும்.

ஒரு கடாயில், ஒரு தேக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு, முறையே பொடியாக‌ ந‌றுக்கிய‌ வெங்காய‌ம், இஞ்சிபூண்டு விழுது, ப‌ச்சை மிள‌காய் போட்டு வ‌த‌க்க‌வும்.

வெங்காய‌ம் சிறிது வதங்கி நிறம் மாறியதும், தூள் வகைகளைப்போட்டு ஒரு வதக்கு வதக்கி, அடுப்பை அணைத்துவிடவும்.

இதனுடன், உதிர்த்துவைத்த சிக்கன், மசித்துவைத்த உருளைக்கிழங்கு, தேவையான அளவிற்கு உப்பு எல்லாம் சேர்த்து ரொம்ப‌வும் அழுத்தாம‌ல் க‌லந்து பிசைய‌வும்.

ப்ர‌ட்டை ஒன்றிரண்டாக பிய்த்து மிக்ஸியில் போட்டு ஒரு சில‌ நொடிக‌ள் ப‌ல்ஸ் மோடில் ஓட்ட‌வும். தயாரான ப்ர‌ஷ்ஷான இந்த ப்ரட் க்ர‌ம்ஸை ஒரு பெரிய‌ த‌ட்டில் கொட்டி ப‌ர‌த்தி விட‌வும்.

முட்டையை உடைத்து வெள்ளையை மட்டும் ஒரு கிண்ணத்தில் போட்டு லேசாக அடித்து வைக்கவும்.

இப்போது த‌யார் செய்து வைத்திருக்கும் கட்லெட் க‌‌ல‌வையை சிறிய‌ எலுமிச்சை அளவாக எடுத்து உருட்டி, லேசாக‌ த‌ட்டி, முட்டையில் தோய்த்து, ப்ர‌ட் க்ர‌ம்ஸ் உள்ள‌ த‌ட்டில் போட்டு, இர‌ண்டு ப‌க்க‌மும் லேசாக‌ அழுத்தி எடுத்து வைக்கவும்.

ஒரு த‌வாவில், சிறிது எண்ணெய்விட்டு, சூடான‌தும் நான்கைந்து க‌ட்லெட்டாக‌ போட்டு ஷாலோப்ரை செய்யவும்.

இப்போது சுவையான சிக்கன் க‌ட்லெட் த‌யார்! டொமெட்டோ கெட்சப் உடன் பரிமாற சுவையாக இருக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE