தகவல் அறியும் உரிமைச்சட்ட மூலத்தில் நன்மை பயக்கும் விடயங்களை காணவில்லை – வவுனியா பிரதேச செயலாளர்

114

தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் எமது பிரதேச செயலகத்திற்கு வரும் விண்ணப்பங்களில் நாட்டுக்கு நன்மைபயக்கும் விடயங்களை காணமுடிவதில்லை என வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா தெரிவித்தார்.

வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் அதிகளவான விண்ணப்பங்கள் எமது பிரதேச செயலகத்திற்கு வந்தவண்ணமுள்ளன.

எனினும் அதில் தனிப்பட்ட ரீதியில் ஒருவருடைய தகவலைப்பெறுவதற்கும் தனிப்பட்ட பிரச்னைகளுக்காக தகவலை பெறும் நோக்கோடே விண்ணப்பங்கள் அதிகளவில் வருகின்றன.

நாட்டின் தேவைக்கான நாட்டின் அபிவிருத்தியை நோக்காக கொண்டு வரும் விண்ணப்பங்கள் குறைந்தளவிலேயே உள்ளது.

எமது அலுவலகத்தில் அலுவலர்களுக்கு அதிக வேலைப்பழு காணப்படும் நிலையில் கிராமங்களில் இருந்து வரும் விண்ணப்பங்கள் இவ்வாறாக காணப்படுவதனால் பெரும் இடையூறு காணப்படுகின்றது.

எமது பிரதேச செயலகத்தின் தகவலை பெறுவதற்கு பெரும் பாதுகாப்பு இரகசியங்கள் எதுவும் இல்லை. எனவே நாட்டுக்கு நன்மை பயக்கும் விடயமாக அதனூடாக நாட்டுக்கு நல்லதை செய்யமுடியும் என எண்ணும் விடயங்களுக்காக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

– வவுனியா நிருபர் –

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE