நெடுங்கேணி கிறிஸ்து அரசர் ஆலய திறப்பு விழா

99

வவுனியா நெடுங்கேணி கிறிஸ்து அரசர் ஆலய அபிசேகத்திறப்பு விழா இடம்பெறவுள்ளது.

வவுனியா வடக்கு நெடுங்கேணி கிறிஸ்து அரசர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தொகுதி எதிர்வரும் 15ஆம் திகதி மன்னார் மாவட்ட மறை ஆயர் அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் யோசப்கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை மாலை 3.30 மணியளவில் அபிசேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது.

இதற்கு அனைத்து கிறிஸ்தவ மக்களும் கலந்து கொண்டு ஆண்டகையின் இறையாசீரை பெற்று கொள்ளுமாறு நெடுங்கேணி கனகராயன்குளம் பங்குத்தந்தை பங்குமக்கள் வேண்டிக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

– முல்லைத்தீவு நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE