பச்சிளம் குழந்தையை உயிருடன் கற்களால் மூடிய கொடூரம்

958

ராஜஸ்தான் மாநிலத்தில் 6வது பெண் குழந்தை பிறந்ததால் அப்பச்சிளம் குழந்தையை கற்களை வைத்து மூடிவிட்டு சென்றால் அக்குழந்தை உயிரிழந்துள்ளது.

வீரம் லால்- சேரம்பாய் தம்பதியினருக்கு ஏற்கனவே 5 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், சேரம்பாய் மீண்டும் கருவுற்றார்.

இதில், 6வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் பச்சிளம் குழந்தையை தலாரபாத்தன் என்ற இடத்தில் உள்ள உணவுக் கிடங்கு அருகே, உயிருடன் கற்களை வைத்து மூடிவிட்டு பெற்றோர் சென்றுவிட்டனர்.

குழந்தை அழும் சத்தம் கேட்டு, அருகில் உள்ளவர்கள் கற்களை அகற்றி பார்த்தபோது, உள்ளே இருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.இதையடுத்து, குழந்தையின் பெற்றோரைக் பொலிசார் கைதுசெய்தனர். விசாரணையில் ஆறாவதாகவும் ஆண் குழந்தை வேண்டுமென்று ஆசைப்பட்டதாகவும், எதிர்பார்ப்புக்கு மாறாக பெண் குழந்தை பிறந்ததால் இவ்வாறு செய்ததாகவும் பெற்றோர் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE