பாகிஸ்தானுடன் வெற்றி..இந்தியாவுடன் தோல்வி

590

இந்தியாவுடன் ஏற்பட்ட தொடர் தோல்விகள் தங்களுக்கு கடினமாக இருந்தது என்று இலங்கை அணியின் தலைவர் சண்டிமால் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியின் தலைவரான சண்டிமால், இந்தியாவுடன் ஏற்பட்ட தொடர் தோல்விகள் எங்களுக்கு கடினமாக இருந்தது. ஆனால் அந்த தோல்விக்கு பின்னர் நிறைய கற்றுக் கொண்டோம்.

தொடர் தோல்வியின் காரணத்தினால் எங்களின் அணுகு முறை மாறியது, அதன் பின் நடப்பு தொடர் துவங்குவதற்கு முன்னர் (கடந்த 18-ஆம் திகதி) எங்களின் பயிற்சியை துவங்கிவிட்டோம்.

இதற்கு எங்களின் நிர்வாகம் மற்றும் தேர்வு குழு உதவியாக இருந்ததால், எங்களின் நம்பிக்கை உயர்ந்தது என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அந்தணி ஒருகட்டத்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 52 ஓட்டங்கள் என்றிருந்த போது, சர்பிராஸ் அகமது மற்றும் அசாத் சபிக் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு கடைசி நாளில் 119 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதனால் ஆட்டத்தின் போக்கு எப்படி இருக்கும் என்ற போது, அந்தணி 225 ஓட்டங்கள் எடுத்த போது சர்பிராஸ் அகமதை தில்வார பெரேரா வீழ்த்தியது தான் போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

அதுமட்டுமின்றி இத்தொடரில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE