பெங்களூர் சிறைக்கு மீண்டும் புறப்பட்டார் சசிகலா

407

சசிகலா அளிக்கப்பட்ட பரோல் இன்றுடன் முடிவடைவதால் சென்னையிலிருந்து பெங்களூருக்கு புறப்பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை பார்ப்பதற்காக ஐந்து நாட்கள் பரோலில் வந்தார் சசிகலா.

கடுமையான கட்டுப்பாடுகளுடன் வெளிவந்தவர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் இன்றுடன் பரோல் முடிவடைவதால் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு புறப்பட்டு சென்றார்.

டிடிவி தினகரன், குடும்ப உறுப்பினர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் இன்று அவருடன் பெங்களூர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE