மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தந்தை

621

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் மகளை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் தந்தைக்கு 38 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அங்குள்ள மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி காவ்யா, கடந்த 2016ம் ஆண்டு, வீட்டில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காவ்யாவை அவரது தந்தை செல்வம், பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

அது மட்டுமின்றி, கூலிப்படை மூலம் மகளை அவர் கொலை செய்ததும் விசாரணையில் அம்பலமானது.

இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மகளிர் நீதிமன்ற நீதிபதி இளங்கோ, மகளைக் கொடூரமாகக் கொன்ற செல்வத்துக்கு 38 ஆண்டுகள் சிறை தண்டனையும், 35 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE