மசாலா பொரி வேண்டுமா? இதோ

660

தேவையானவை

பொரி -2கப்
மிக்சர் -1/4கப்
வேர்க்கடலை வருத்தது -1/4கப்
பூண்டு -4பற்கள்
கறிவேப்பிலை -1கொத்து
காய்ந்தமிளகாய் -2
மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்
எண்ணை -1ஸ்பூன்

செய்முறை

பூண்டை தட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி தட்டிய பூண்டு போட்டு,மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

அதில் பொரி,வேர்க்கடலை,மிக்சர்,மஞ்சள்பொடி போட்டு எல்லாம் ஒன்றாக கலக்கும்படி கிளறவும்.

பொரி மொருமொருப்பாக ஆனவுடன் இறக்கவும்.
காரமாக விரும்புவோர்,1/4ஸ்பூன் கரம்மசாலாபொடி சேர்க்கவும்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE