வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு அனைத்து அதிகாரிகளும் சமூகமளிக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

119

வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு அனைத்து அதிகாரிகளும் சமூகமளிக்க வேண்டும் அவ்வாறு இக்கூட்டத்திற்கு சமூகமளிக்காத அதிகாரிகளின் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவரும் இணைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உயர் அதிகாரிகள் சமூகமளிக்காதமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இக்கூட்டத்திற்கு மக்களுடன் தொடர்புடைய பல திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்து கொள்ளாத அதேவேளை இக்கூட்டத்திற்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவர்களான வர்த்தக கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிஷாட்பதியூதீன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆகியோர் சமூகமளிக்காததுடன் வவுனியாவை பிரதிநிதிப்படுத்தும் வடமாகாண சபை உறுப்பினர்களான முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், இ.இந்திரராசா, ஜி.ரி.லிங்கநாதன், ஜெயத்திலக்க, தர்மபால, போன்ற பலர் கலந்து கொள்ளாமையால் பல கதிரைகள் காலியாக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக இப்பிரதேச மக்களின் பல பிரச்சினைகளிற்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உரிய தீர்மானங்களை எடுப்பதற்கு முடியாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

– வவுனியா நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE