ஹர்த்தாலுக்கு வவுனியா வர்த்தகர் சங்கம் பூரண ஆதரவு

176

வடமாகாணத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இடம்பெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் தமது பூரண ஆதரவினை வழங்குவதாக அதன் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த பதினெட்டு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளிற்கு ஆதரவு தெரிவித்தும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நாளை நடாத்தப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு வவுனியா வர்தக சங்கம் ஆதரவு வழங்குவது தொடர்பான கூட்டம் இன்று வர்த்தகர் சங்கத் தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் நாளை நடைபெறவுள்ள கடையடைப்புப் போராட்டத்திற்கு பூரண ஆதரவினை வழங்குவதற்கு முடிவு எட்டப்பட்டதாக வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

– வவுனியா நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE