அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை அரசியல் பயணத்திற்கு புதிய ஆரம்பம்: வெல்கம

140

தாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்துகம தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை, தமது அரசியல் பயணத்திற்கு புதிய ஆரம்பமாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்துகம தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து குமார வெல்கமயும், நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து மகிந்தானந்த அலுத்கமகேயும் நேற்று நீக்கப்பட்டனர்.

அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிடம் வினவிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

– பிராந்தியச் செய்தியாளர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE