அரசியல் கைதிகள் விடுதலை வேண்டி விசேட பூசை நிகழ்வு

186

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம், தமிழ் விருட்சம், கருமாரி அம்மன் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து ஏற்பாடு செய்த அரசியல் கைதிகள் விடுதலை வேண்டிய விசேட பூசை நிகழ்வு இன்று கருமாரி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்றது.

அவர்களின் நலன் வேண்டியும், விடுதலை வேண்டியும் நடைபெற்ற இந்த பூசை நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் தியாகராஜா, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், அக்கினிச்சிறகுகள் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்.

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் வழக்குகள் வவுனியாவிற்கு மாற்றப்பட வேண்டும். குறிப்பாக அவர்களின் வழக்குகளை துரிதமாக நடாத்தி நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.

– வவுனியா நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE