அவுஸ்ரேலியாவிலிருந்து இலங்கையர்களை நாடுகடத்த திட்டம்

768

அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் எதிர்வரும் வாரங்களில் அதிக அளவிலான ஈழ ஏதிலிகள் நாடுகடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மானஸ் தீவின் முகாமை, இந்த மாதத்துடன் மூடுமாறு பப்புவா நியூகினியின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் அங்குள்ள ஏதிலிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அவுஸ்ரேலிய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

இதன்படி மானஸ்தீவுகளில் இருந்தபடி அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பித்துள்ளவர்களை நவுறு தீவிற்கு மாற்றுவதற்கான ஒழுங்குகள் இடம்பெறுகின்றன.

ஏனையோரை மீண்டும் அவுஸ்திரேலியாவிற்கே அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதால், அவர்களில் நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

– பிராந்தியச் செய்தியாளர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE