இளைஞனை கொடூரமாக அடித்து இழுத்துச் சென்றது பொலிஸ்: யாழில் பெற்றோர் முன்னிலையில் சம்பவம்

1301

இளைஞன் ஒருவன் பெற்றோருக்கு முன்பாக மானிப்பாய் பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்டு வாகனத்தில் இழுத்து செல்லப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மானிப்பாய் லோட்டன் வீதியிலுள்ள வீடொன்றுக்கு வாகனத்தில் சென்ற பொலிஸார் அங்கிருந்த இளைஞன் ஒருவனை பெற்றோர்கள் முன்னிலையில் கடுமையாக தாக்கியதுடன் அதனை தடுக்க முற்பட்ட அவரது தாயாரையும் ஒரு பொலிஸ்ஸார் தாக்க முற்பட்டுள்ளார். எனினும் அவ் வீட்டில் பாதுகாப்பு கமரா பூட்டப்பட்டிருந்ததை அவதானித்த மற்றைய பொலிஸார் அதனை தடுத்துள்ளார்.

இதனையடுத்து அவ் இளைஞனை மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர். குறித்த இளைஞன் ஒரு ஆஸ்த்துமா நோயாளி எனவும் தெரிய வருகின்றது.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் எழுந்தமானமான செயற்பாடுகள் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்து வருகின்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE