உலகின் பட்டினியில்லா நாடுகள் பட்டியல் வெளியீடு

892

பட்டினியில்லா நாடுகளின் பட்டியலை உலக உணவு கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் உலக உணவு கொள்கை ஆய்வு மையம் பட்டினியில்லாத நாடுகள் குறித்த ஆய்வை நடத்தி அதன் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பட்டியலில் 5க்கும் குறைவான மதிப்பெண்களுடன் சிலி, கியூபா, துருக்கி ஆகிய நாடுகள் பட்டினியில்லா நாடுகள் மற்றும் சிறந்த வளரும் நாடுகள் என்ற பெருமையைப் பெற்றுள்ளன.
ஆப்பிரிக்க குடியரசு நாடுகள் 43.5 முதல் 50.9 மதிப்பெண்கள் பெற்று உலகின் மோசமான பட்டினி கொடுமையால் அவதிப்படும் நாடுகளாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில் சீனா 29வது இடத்தையும், நேபாளம் 72வது இடத்தையும், மியான்மர் 77வது இடத்தையும், இலங்கை 84வது இடத்தையும், வங்கதேசம் 88வது இடத்தையும் பிடித்துள்ளது.
பொருளாதார தடை உள்ளிட்ட பிரச்சனையால் தவிக்கும் வடகொரியா பட்டியலில் 93-வது இடத்தில் இருக்க இந்தியாவுக்கு 31.4 மதிப்பெண்களுடன் 100-வது இடமே கிடைத்துள்ளது.
பட்டினியில் அதிகம் வாடுவோர் உள்ள ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் 78வது இடத்திலும், பாகிஸ்தான் 106வது இடத்தில் உள்ளது.

2000-வது ஆண்டை விட தற்போது 27 சதவீதம் பட்டினி எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், தற்போது உலகம் முழுவதும் 9 பேரில் ஒருவர் உணவில்லாமல் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE