கடன்பிரச்சினையை தீர்க்க விசேட வேலைத்திட்டம் – மத்திய வங்கி

209

வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களது கடன்பிரச்சினையை தீர்ப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி த ஹிந்து ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த மத்திய வங்கியின் ஆளுனர், அங்குள்ள மக்களின் கடன்பிரச்சினை தொடர்பான ஆய்வுகளை நடத்தி இருந்தார்.

இதன் அடிப்படையில் அதிக கடன்களால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு, அதில் இருந்து அவர்களை மீட்பதற்கான வேலைத்திட்டம் ஒழுங்கு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பாரிய அளவில் அதிகரித்துள்ள வட்டிவீதங்களை குறைப்பது மற்றும் கடன் முதிர்ச்சிக் காலத்தை நீடித்தல் போன்ற தெரிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

– பிராந்தியச் செய்தியாளர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE