கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையம் இன்று கிளிநொச்சியில் திறப்பு (படங்கள் இணைப்பு)

120

கிளிநொச்சி கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையம் இன்று கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

மத்திய கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரியதாச தலைமையில் இடம்பெற்ற, மத்திய கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் சுமார் 32 மில்லியன் நிதியுதவியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட குறித்த கட்டடத்தினை பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ரி.ஹரிசனால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் ஆரியதாச, பணிப்பாளர் விலங்கு சுகாதார வைத்தியர் நிமால் ஜெயவீர, மேலதிக செயலாளர் வைத்தியர் நிகால் மற்றும் கால்நடை வைத்தியதிணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

– கிளிநொச்சி நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE