சமகால சர்வதேச விவாதங்கள் கலந்துரையாடல் நிகழ்வு

93

சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள சமகால சர்வதேச விவாதங்கள் விசேட கலந்துரையாடல் நிகழ்வில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை பி.ப 4 மணியளவில் இவ்வருடம் வெளியிடப்பட்டு 150 ஆண்டுகளைத் (1867 – 2017) தொட்டு நிற்கின்ற கார்ள் மாக்சின் ‘மூலதனம்’ நூல் பற்றிய விமர்சனப் பகுப்பாய்வு இடம்பெறவுள்ளது.

இல. 62இ கே.கே.எஸ். வீதி கொக்குவில் சந்தி என்ற முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் தொடக்கவுரையை ச. தனுஜனும் அறிமுக உரையை அரசியல் பொருளாதார ஆய்வாளர் அகிலன் கதிர்காமரும் ஆற்றவுள்ளனர்.

இக் கலந்துரையாடலில் மூலதனம் நூலின் சாராம்சம் தமிழிலே முதல் நாற்பது நிமிடங்களுக்குள் வழங்கப்படும். அதனை அடுத்துள்ள 90 நிமிடங்களுக்கு இதுவரை இந் நூலானது எவ்வாறெல்லாம் நோக்கப்பட்டு வந்துள்ளது? இன்றைய உலகச் சூழலில் இந் நூலின் பொருத்தப்பாடு யாது? என்பன பற்றிய கலந்துரையாடல் இடம்பெறும். ஆர்வமுள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தினர் அழைத்துநிற்கின்றனர்.

– யாழ் நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE