சீனாவை குறிவைக்கும் வடகொரியா

782

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து பொருளாதார தடைக்கு சீனா காரணமாக அமைந்துள்ளதை அடுத்து அந்த நாட்டின் மீது கிம் ஜோங் வுன் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

வடகொரியாவின் நெருங்கிய நண்பனும் நீண்ட கால நட்பு நாடுமான சீனா மீது வடகொரியா கடும் கோபத்தில் உள்ளது.

சமீபகாலமாக வடகொரியாவுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் மற்றும் வர்த்தக நெருக்கடிகளுக்கு சீனாவும் ஆதரவளித்து வருவதை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் வுன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் இதுவரை ஜப்பான் கடற்பகுதியில் ஏவுகணை சோதனை மேற்கொண்டு வந்த வடகொரியா, அடுத்த கிழமை சீனா அருகாமையில் அமைந்துள்ள Nampo பகுதியில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக 30 ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

துறைமுக நகரமான Nampo வடகொரியாவின் ராணுவ கப்பற்தளம் மட்டுமின்றி முக்கிய ராக்கெட் தளமாகவும் உள்ளது.

வடகொரியா அடுத்த வாரத்தை குறித்த தாக்குதலுக்கு தெரிவு செய்ய காரணமாக கூறப்படுவது, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாடு குறிப்பிட்ட நாளில் நடைபெறவிருக்கிறது.

அதே நாளில் ஏவுகணை தாக்குதலை முன்னெடுக்கவும் சீனாவை அச்சுறுத்தவும் வடகொரியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பான் மற்றும் குயாமில் இருந்து வடகொரிய துறைமுக நகரமான Nampo நோக்கி தாக்குதல் நடத்த முடியாது என்பது மட்டுமல்ல, Nampo நகரில் இருந்து 328 மைல்கள் தொலைவில் இருக்கும் சீனாவின் Dalia நகரையும், 200 மைல்கள் தொலைவில் இருக்கும் Qindao நகரையும் வடகொரியாவால் மிக எளிதாக தாக்க முடியும்.

மட்டுன்றி தென் கொரியாவின் தலைநகரான சியோல் Nampo நகரில் இருந்து வெறும் 121 மைல்கள் தொலைவில் தான் உள்ளது.

இருப்பினும் தற்போதைய சூழலில் சீனா மீது ஒரு எச்சரிக்கை தாக்குதலை மேற்கொள்ள கிம் ஜோங் அரசு துனியாது என்பது மட்டுமல்ல, தமது ஒரே நட்பு நாட்டையும் பகைத்துக் கொள்ள அது முயலாது.
ஆகையால் சீனா அருகாமையில் அமைந்துள்ள கடற்பகுதியில் வேண்டுமானால் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தலாம் எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE