ஜனாதிபதி வருகை: கிளிநொச்சியில் பொலிஸார் குவிப்பு (படங்கள் இணைப்பு)

669

கிளிநொச்சியில் நாளை ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்விற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரு வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக அதிகளவான பொலிஸார் வரவளைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நகர் உட்பட பல பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆங்காங்கே விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களைப்போன்றல்லாது இராணுவத்தினரின் பிரசன்னம் குறைவாகவே காணப்படுவதுடன், அதிகளவில் பொலிஸாரே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

– கிளிநொச்சி நிருபர் –

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE