டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியன்கிண்ண தொடரை நடத்துவதற்கு அங்கீகாரம்

495

டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியன்கிண்ண தொடரை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒக்லேண்டில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் பொதுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி 2019ம் ஆண்டு உலக கிண்ணத் தொடர் நிறைவடைந்தப் பின்னர், 9 அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கப்படும்.

ஒவ்வொரு அணியும்சொந்தமண்ணில் 3 போட்டிகளிலும், வெளிநாடுகளில் 3 போட்டிகளிலுமாக ஆறு போட்டிகளில் விளையாடும்.

இதில் தெரிவாகும் இரண்டு அணிகளுக்கு இடையில், 2021ம் ஆண்டு ஜுன் மாதம் இங்கிலாந்து டெஸ்ட் உலக கிண்ணத்தின் இறுதிப் போட்டி நடத்தப்படும்.

அதேநேரம், ஒருநாள் தரவரிசையில் முதல் 13 இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கட் லீக் தொடர் ஒன்றும் 2020-21ம் ஆண்டுகளில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த லீக்கில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 3 ஒருநாள் தொடர்களில் பங்கேற்றிருக்க வேண்டும்.

இதன் புள்ளிகளின் அடிப்படையில் 2023-24ம் ஆண்டுக்கான உலக கிண்ணத் தொடருக்கான அணிகள் தெரிவு செய்யப்படும்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE