திருத்த சட்டமூலம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளிப்பு

76

மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்த கட்டளைச் சட்டமூலம் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இந்த சட்டமூலம், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்த கட்டளைச் சட்டமூலத்திற்கு நேற்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரிய கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE