மன்னாரில் பூரண ஹர்த்தால் (படங்கள் இணைப்பு)

229

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து வடக்கில் ஏற்பாடு செய்துள்ள ஹர்த்தால் இன்று வெள்ளிக்கிழமை மன்னாரிலும் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு மாற்ற வேண்டும், மற்றும் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க வேண்டுமெனவும் கோரி, குறித்த ஹர்த்தால் வடக்கில் அனுஸ்ரிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.

மன்னாரில் இருந்து அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லாத நிலையில் பாடசாலை நடவடிக்கைகளும் செயலிழந்துள்ளது.

இதனால் மன்னார் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-மன்னார் நிருபர்-

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE