மலேசிய கடவுச்சீட்டுக்களுடன் பிடிபட்ட இலங்கையர்கள் தொடர்பில் இந்தோனிசியாவுடன் பேச்சு

423

கடந்த திங்கட்கிழமை, மலேசிய கடவுச்சீட்டுக்களுடன் பிடிபட்ட ஐந்து இலங்கையர்கள் தொடர்பில் மலேசிய குடிவரவு திணைக்களம் இந்தோனிசியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நியூ ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது

இந்தோனிசியாவின் ஊடாக ஐரோப்பியாவுக்கு செல்வதற்காக இந்த கடவுச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவு திணைக்கள பணிப்பாளர் டட்டுக் சேரி மஸ்டாபர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இந்தோனேசிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ள ஐந்து இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை திரட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஐந்துபேரும் மலேசிய கடவுச்சீட்டுக்களை கொண்டிருந்தபோதும் அவை அவர்களின் பெயர்களில் இருக்கவில்லை

அதேநேரம் தாம் மலேசிய மற்றும் இந்தோனேசியாவுக்கு இலங்கையின் கடவுச்சீட்டுக்களுடன் வந்து பின்னர் அந்த கடவுச்சீட்டுக்களை கிழித்தெறிந்துவிட்டதாக குறித்த இலங்கையர்கள் ஐந்துபேரும் விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE