ரஜினியின் கேள்விக்கு கமல்ஹாசனின் பதில்

472

சமீபத்தில் நடைபெற்ற சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் வெற்றி பெறுவதற்கு புகழ் மட்டும் போதாது, அதற்கு மேல் ஒன்றும் தேவைப்படுகிறது, அது என்ன என்பது மக்களுக்கு மட்டும் தான் தெரியும், எனக்கு தெரியாது.

இந்த பாடம் நடிகர் சிவாஜிகணேசனின் அரசியல் வாழ்க்கை மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.

ஒரு வேலை அரசியலில் வெற்றி பெறுவதற்கு தேவையானது என்ன என்பது நடிகர் கமல்ஹாசனுக்கு தெரிந்திருக்கலாம், அதை நான் கேட்டால் கமல் என்னிடம் கூறமாட்டார் என்று பேசியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த கமல்ஹாசன், அரசியலில் உண்மையான வெற்றி என்பது, ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி அதிக இடங்களை கைப்பற்றி முதல்வராக மாறுவது.

அந்த வெற்றியின் உண்மையான நோக்கம் மக்களுக்கு நல்ல ஆட்சியை வழங்குவது, அது நடக்கவில்லை என்றால் தேர்தலில் வெற்றிபெறுவது அர்த்தமற்றதாகும் என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE