வவுனியாவில் பூரண ஹர்த்தால் (படங்கள் இணைப்பு)

383

பத்தொன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளிற்கு ஆதரவு தெரிவித்தும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இன்று வடமாகாணத்தில் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த ஹர்த்தாலுக்கு வவுனியா வடக்கு வர்த்தகர் சங்கம் பூரண ஆதரவை வழங்கிய வகையில் வவுனியாவில கடைகள் மூடப்பட்டு காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

மேலும் வவுனியாவில் அரச திணைக்களங்கள் வழமைபோன்று செயற்பட்ட போதிலும் அரச உத்தியோகத்தர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

– வவுனியா நிருபர் –

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE