ஊர்காவற்றுறை சென்.மேரிஸ் மகளிர் கல்லூரிக்கு பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்கல்

145

ஊர்காவற்றுறை சென்.மேரிஸ் மகளிர் கல்லூரிக்கு வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் 2017ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டின் கீழ் ரூ.70,000 பெறுமதியான பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை காலை 10 மணியளவில் பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் குறித்த கதிரைகள், மாகாணசபை உறுப்பினரால் அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

தொடர்ந்து பாடசாலையின் குறைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட அவர், பாடசாலையின் கட்டிடம் இடிந்த நிலையிலுள்ளதையும் பார்வையிட்டதுடன், உரிய தரப்பினரிடம் பேசி ஆவன செய்வதாகவும் தெரிவித்தார். மாகாணசபை உறுப்பினருடன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

– தென்மராட்சி நிருபர் –

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE