பாகிஸ்தானுடன் விளையாடி படுதோல்வியடைந்த இலங்கை

626

பாகிஸ்தானுடனான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் முதல் ஆறு துடுப்பாட்ட வீரர்களின் மோசமான செயல்பாடு தான் என பயிற்சியாளர் நிக் போத்தாஸ் கூறியுள்ளார்.

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்ற நிலையில் இலங்கை அணி 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

தோல்விக்கு பின்னர் பேசிய இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போதஸ், வெற்றிக்கான சரியான பார்முலாவை கண்டுப்பிடிக்க முயன்று வருகிறோம்.

உலக கிண்ண போட்டிகள் விரைவில் வரவுள்ளது. அதற்குள் இதை செய்யவேண்டியது அவசியமாகும்.

இலங்கை அணியின் முதல் ஆறு துடுப்பாட்ட வீரர்களிடம் அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் சோபிக்கவில்லை.

வெறும் 96 ஓட்டங்கள் மட்டுமே நேற்றைய போட்டியில் ஆறு பேரும் சேர்ந்து எடுத்தார்கள், இது போதாது.

இந்த வருடம் இலங்கை அணி விளையாடிய 22 ஒருநாள் போட்டிகளில் வெறும் நான்கில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதற்கு அணியினரிடையே தன்னம்பிக்கை குறைவாக உள்ளதே காரணம் என்பேன்.

வீரர்களிடையே தன்னம்பிக்கையை ஊக்குவிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம், இலங்கை பந்துவீச்சாளர்களும் அணிக்கு ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என ஏற்கனவே கூறியுள்ளேன்.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE