வீட்டிலேயே சத்து மா தயாரிப்பது எப்படி?

1437

சத்துமாவு இது மிகவும் ஆரோக்கியமான ஒன்று குழந்தைகள் முதல் பொரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். இதில் நவதானியங்கள் அனைத்தும் இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். டீ, காபிக்குப் பதில் காலையும் மாலையும் அருந்தலாம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை – 100 கிராம்
பச்சஅரிசி – 100 கிராம்
உளுந்து – 100 கிராம்
பாசிப்பயறு – 100 கிராம்
கொள்ளு – 100 கிராம்
வேர்க்கடலை – 100 கிராம்
முந்திரி – 100 கிராம்
பாதாம் – 100 கிராம்
ஏலக்காய் – 100 கிராம்
ஜவ்வரிசி – 100 கிராம்
மக்காச் சோளம் – 100 கிராம்
கொண்டக்கடலை – 100 கிராம்
பொட்டுக்கடலை – 100 கிராம்

செய்முறை:

மேலே கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுக்கவும்.

வறுத்தவுடன் அனைத்தையும் ஆரவைத்து ஒன்று சேர்த்து மிக்சியில் அல்லது மாவு அரைக்கும் இடத்தில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.

மாவு ஆறிய உடன் மாவு சலிப்பானில் நன்கு சலித்து கொள்ளவும். பிறகு ஒரு போத்தலில் கொட்டி வைத்தால் தேவைப்படும் போது பாலில் காய்ச்சி அருந்தலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE