எடப்பாடி பழனிச்சாமியுடன் நடிகர் விஜய் சந்திப்பு

540

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசியுள்ளார்.

நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் சில தினங்களில் வெளிவரவுள்ளது. ஆரம்பத்திலிருந்தே இப்படத்துக்கு சிக்கல் இருந்து வருகிறது.

படத்தின் பெயர் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் மெர்சல் குழுவுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது போல மேலும் சில சிக்கல்கள் படத்துக்கு வந்துள்ளன.

இந்நிலையில் தான் நடிகர் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் இன்று காலை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடன் இருந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE