சாக்லெட் கேக் செய்வது எப்படி?

1432

தேவையானவை

சாக்லெட் பவுடர் – ஒரு கப்
மைதா மாவு – ஒரு கப்
சன்ப்ளவர் ஆயில் – அரை கப்
வெண்ணெய் – அரை கப்
முட்டை கரு – ஒரு கப்
சீனி – ஒரு கப்
சாக்லேட் எசன்ஸ் – 5 சொட்டுகள்
நெய் – ஒரு ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 10
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

சீனியை பவுடராக்கி, அதில் வெண்ணெய், பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்கு குழைக்கவும்.

பிறகு சன்ப்ளவர் ஆயிலை அத்துடன் நன்கு கலக்கிவிட்டு மைதாவையும் சேர்த்து மீண்டும் கலக்கவும்.

முட்டை கருவை நன்றாக கலக்கி அத்துடன் சேர்த்து சாக்லெட் பவுடர் மற்றும் எசன்ஸ்யையும் சேர்க்கவும்.

இந்த கலவையை சுமார் 3 மணி நேரம் அப்படியே வைத்திருந்து, பிறகு நெய் தடவிய தட்டில் ஊற்றி அவனில் வைக்கவும்.

பாதி வெந்து வரும்போது முந்திரிப்பருப்பை நறுக்கி மேலே தூவி மீண்டும் அவனில் வைத்து எடுக்கவும். சுவையான சாக்லெட் கேக் தயார்

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE