தமிழ்நாட்டை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும்- சரத்குமார்

687

வந்தாரை வாழ வைக்கும் நாடாக தமிழகம் இருக்கட்டும், ஆனால் அந்த தமிழ்நாட்டை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

ஒரு தமிழன் கர்நாடாகாவிற்கு சென்று சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டால் அந்த மாநில மக்கள் ஒத்துக்கொள்வார்களா? அல்லது முதல் அமைச்சராக இருந்தால் ஏற்றுக்கொள்வார்களா?

அப்படியிருக்கையில் எதற்காக ஒரு தமிழ்நாட்டை மட்டும் வேறு மாநிலத்தவர்கள் ஆள்வதற்கும் நாம் அனுமதிக்க வேண்டும்.

இதனை பிரிவினைவாதம் என்று பார்ப்பதைவிட, ஒரு தமிழ் உணர்வு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு ஒரு நடிகரை பிடித்திருந்தால் அவரை ரசியுங்கள், ஆனால் தமிழர் அல்லாத ஒரு நபர் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளாதீர்கள் என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE