வவுனியாவில் சிறுவர் முதியோர் தின விழா

892

சிறுவர் முதியோர் தின விழா இன்று வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தில் ஈச்சங்குளம் கிராம சேவகர் த.அன்ரணிதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் முதல் நிகழ்வாக விருந்தினர்களை மாலை அணிவித்து பான்ட் வாத்தியம் முழங்க அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

இதன் போது முதியோர்க்கான கௌரவிப்பும், சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட இணைத்தலைவர் கே.கே.மஸ்தான், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் வடமாகாண சபை சுகாதார அமைச்சரும் உறுப்பினருமான ப.சத்தியலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், எம்.பி.நடராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம், சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா நிருபர்-

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE