வவுனியா சுவரொட்டிகளுக்கும் சிவ சேனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

630

 

வவுனியா நகரில் சுவரொட்டிகள். சிவ சேனா வெளியிட்டதாகச் சுவரொட்டிகள்.
இன, மத முரண்பாட்டை இந்துக்கள் முன்னெடுப்பதாகக் கருதக்கூடிய சுவரொட்டிகள்.
இந்தச் சுவரொட்டிகளுக்கும் சிவ சேனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
எந்தத் தொழில் செய்பவருக்கும் எத்தகைய வாடிக்கையாளர், பயனாளி கிடைக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நோக்கம் சிவ சேனைக்குக் கிடையாது.
,1.மத மாற்றத் திணிப்பை முடிந்தளவு தடுக்கவேண்டும்,
2. சைவத் தமிழ் வழிபாட்டிடங்களில் பிற சமய ஊடுருவல்களை முடிந்தளவு தடுக்கவேண்டும்.
3. சைவத் தமிழ் நலன்களைப் பேணும் கொள்கையை முன் வைக்கும் சைவத் தமிழ் வேட்பாளர்களுைக்கே சைவத் தமிழர் வாக்களிக்கவேண்டும்.
இவை சிவ சேனையின் கொள்கைகள்.நோக்கங்கள். வேறு நோக்கங்கள் சிவசேனைக்குக் கிடையாது.
15.10.2017 நாளிட்ட, கீழுள்ள படத்திலுள்ள வவுனியாவின் சுவஸ்திகா முத்திரைச் சுவரொட்டிகள் சிவ சேனையினுடையதல்ல. விஷமத்தனமான இம் முயற்சியைச் சிவசேனை கண்டிக்கிறது. இந்துக்கள் இத்தகைய முயற்சிகளுக்குக் கைகொடார்.
மறவன்புலவு க.சச்சிதானந்தன்
தலைவர், சிவ சேனை

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE