வவுனிய ஏ9 வீதியில் பட்டா ரக வாகனம் தடம் புரண்டு விபத்து[படங்கள் இணைப்பு]

772

வவுனியா – ஈரட்டைபெரிய குளத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி தேயிலை, வினாகிரி உள்ளிட்ட பொருட்களுடன் பயணித்த பயணித்த பட்டா ரக வாகனம், வீதியை விட்டு விலகி மதகுடன் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் வாகனத்தின் சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சாரதியின் நித்திரை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

-வவுனியா நிருபர் –

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE