13 வயது சிறுமி துஸ்பிரயோகம்!தந்தை கைது!

820

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து அச்சிறுமியின் தந்தை ஈச்சங்குளம் பொலிசாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றின் 13 வயது சிறுமியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த தாயார் மூன்று தடவைகள் தனியார் மருத்துவ மனையில் ஆலோசனை பெற்றிருந்த நிலையில் சிறுமிக்கு உடல் பலவீனமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதில் திருப்தியடையாத தாயார் வவுனியா மருத்துவ மனைக்கு கடந்த வியாழக்கிழமை சிறுமியை அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதன்போது குறித்த சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது தாய் கூலிவேலைக்கு செல்லும் நாட்களில் வேலை முடிந்து வீட்டில் நின்ற நேரங்களில் தந்தையால் குறித்த சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஈச்சங்குளம் பொலிசில் கடந்த வெள்ளிக்கிழமை தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக 39 வயதுடைய குறித்த சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு இன்று (15.10) வவுனியா நீதவான் முன்னிலையில் ஆயர் செய்யப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE