இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் இன்று

541

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று டுபாயில் இடம்பெறவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி பெற்றிபெற்றது.

இன்றைய போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கும் இடையிலான 150 ஆவது ஒருநாள் போட்டியாகும்.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் பெரியளவில் மாற்றம் இல்லை என்பதுடன், சமார கப்புகெதரவை அணிக்கு அழைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து 8 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ள இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வருடத்தில் இலங்கை அணி 22, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றியுள்ள நிலையில் அதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதோடு 17 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த வருடத்தில் அணியொன்று அதிக போட்டிகளில் தோல்வியடைந்துள்ள சாதனையில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE